கம்பஹாவிலிருந்து வந்தவர்கள் உடனடியாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்குமாறு வடமாகாண ஆளுநர் அறிவிப்பு

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையிலிருந்து வந்தவர்கள் வடமாகாணத்தின் எப்பகுதியில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு (MOH) அறிவிக்கும்படி வடமாகாண ஆளுநர், திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் கேட்டுள்ளார்.

இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கம்பஹா, மினுவாங்கொட ப்ரண்டிக்ஸ் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கோரோனா தொற்றாளர்களின் கொத்தணி, நாடுமுழுவதும் பரவியிருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், தொற்றாளர்களுடன் தொடர்புடைய பலர் தங்களுடைய தகவல்களை மறைப்பதனால் அவர்களுக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருப்பின் மிகக்கடுமையான சவாலை சமூகம் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்நிலையில் வடமாகாண ஆளுநர், திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ், இது தொடர்பான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொட தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள் யாரேனும் வடமாகாணத்தின் எப்பிரதேசத்தில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்குமாறும் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் வடமாகாண மக்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார் – என்றுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

மேலும் 2 கோவிட் -19 நோயாளிகள் சாவு

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று சனிக்கிழமை (நவ.28) இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால்...
- Advertisement -

நாட்டில் இன்று 487 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறிவு

நாட்டில் இன்று (நவ.28) சனிக்கிழமை 213 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது இன்று மட்டும் 487 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை. கலைப்பீட மோதல் – குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்களுக்கான தண்டணைகளை உறுதிப்படுத்தியது பேரவை !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால்...

மேலும் 274 பேருக்கு கோரோனா தொற்று

நாட்டில் இன்று (நவ.28) சனிக்கிழமை 274 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கோவிட் -19 நோய் தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான...

Related News

தனி மனிதனின் சமூகப் பொறுப்பற்ற செயலால் பலர் பாதிப்பு; வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் விடுக்கும் முக்கிய அறிவிப்பு

"கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து...
- Advertisement -
error: Alert: Content is protected !!