“குரங்கு அம்மை நோய் குறித்து இலங்கையும் கவனம் செலுத்தவேண்டும்”

உலகின் பல நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் (Monkeypox) தொடர்பில் இலங்கையும் அவதானம் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் சோர்வு ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும் என ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“மே 13 முதல் நேற்று வரை உலகில் 14 நாடுகளில் 92 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

ஆபிரிக்க பிராந்தியத்தில் பரவியதாக நம்பப்படும் குரங்கு அம்மை நோய் பரவுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

பெரும்பாலான நோயாளிகள் சில வாரங்களில் குணமடையும் போது, பிசிஆர் பரிசோதனையின் மூலம் வைரஸைக் கண்டறிய முடியும்.

பாதிக்கப்பட்ட நபருடன் நேருக்கு நேர் வருவதன் மூலமோ, நேரடி உடல் தொடர்பு மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபர்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் தளபாடங்களைப் பயன்படுத்துவதன் மூலமோ இது சுவாசத் துளிகள் மூலம் பரவுகிறது.

இருப்பினும், இந்த நோய் கோவிட்-19 போன்ற மிகவும் பயங்கரமான நோயாக இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

பெரியம்மை தடுப்பூசி போடப்படுபவர்களுக்கு இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும்” என்றும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.