Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரி கடத்தல்

கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரி கடத்தல்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபடும் 23 வயதுடைய வியாபாரி கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வியாபாரி கடத்தப்பட்டதாக கோப்பாய் பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து வாகனம் ஒன்றில் வருகை தந்த 12 பேர் கொண்ட கும்பல், பழ வியாபாரியை தாக்கிவிட்டு அவரை கடத்திச் சென்றதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular