அநுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான தொடருந்து பாதையின் சீரமைப்புப் பணிகள் இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான பாதையை மேம்படுத்தும் பணிகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அந்தப் பணிகள் நிறைவடைந்ததும், வடக்குப் பாதையில் சராசரியாக மணிக்கு 100 மீற்றர் வேகத்தில் தொடருந்துகளை இயக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு தொடருந்து பாதையின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததன் காரணமாக காங்கேசன்துறைக்கும் கொழும்புக்கும் இடையிலான பயண நேரம் சுமார் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் குறையும் என்று பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
மாஹோ சந்தி மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான பாதையை சீரமைக்கும் பணியை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.