Tuesday, December 5, 2023
Homeஉள்ளூர் செய்திகள்காரின் கதவு திடீரென திறப்பு; மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மோதி பரிதாபச் சாவு - உப்புமடத்தில்...

காரின் கதவு திடீரென திறப்பு; மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மோதி பரிதாபச் சாவு – உப்புமடத்தில் சம்பவம்

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்ட நிலையில் வீதியால் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி உப்புமடம் பகுதியில் இன்று இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுன்னாகத்தைச் சேர்ந்த லோகராசா தர்சன் என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார். அவர் மேசன் தொழிலாளி என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த சுன்னாகம் பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்துக்கு காரணமான காரினை அங்கிருந்து எடுத்து செல்ல முற்பட்ட போது அப்பகுதியில் கூடியவர்கள் முரண்பட்டனர்.

உரிய விசாரணைகள் இடம்பெறாது சடலத்தை அப்புறப்படுத்தியதுடன் விபத்துக்கு காரணமான காரினை பொலிஸார் எடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர். அதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

அத்துடன், காரின் சாரதி பொலிஸில் சரண்டைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலதிக விபரம் இணைக்கப்படும்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular