காரைநகர் தனிமைப்படுத்தப்படவில்லை; இன்று காலைவரை 36 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்

“காரைநகர் பிரதேச செயலக பிரிவை தனிமைப்படுத்தும் தீர்மானம் இன்று காலை வரை எடுக்கப்படவில்லை. கோரோனா தொற்று உள்ளவருடன் தொடர்புடையவர்களை சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர். இன்று மாலை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”

இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

காரைநகரில் இன்று சனிக்கிழமை காலை 8 மணிவரை 36 குடும்பங்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சில வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

கடந்த 21ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாள்களுக்கு மேல் பல இடங்களுக்கு நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

“காரைநகர் பிரதேசத்தில் கோரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதேச சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதனால் கோரோனா தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.

சுகாதாரத் துறையினரின் கள நிலமைகளை ஆராய்ந்து இன்று மாலை அடுத்த கட்ட நவடிக்கை எடுக்கப்படும்” என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

கோவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணி நாளை மேல் மாகாணத்திலுள்ள 6 வைத்தியசாலைகளில் ஆரம்பம்

இந்திய அரசு வழங்கிய கோவிட்-19 தடுப்பூசிகளின் முதல் தொகுதி இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயினால் இன்று (28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோத்தாபய...
- Advertisement -

கலாசார சீரழிவில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்பட்ட நால்வரும் விளக்கமறியலில் – மல்லாகம் நீதிமன்றின் உத்தரவில்

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்...

நயினாதீவு ஆலய அறநெறி மாணவர்களுக்கு இசைக்கருவிகளை வழங்கிவைத்தது இந்தியா

நயினாதீவு ஆலயத்தில் அறநெறி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்தாயாவினால் இசைக் கருவிகள் ஆலய நிர்வாகத்திடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டன.  தைபூச நன்னாளில் (ஜனவரி 28, 2021), இந்தியத் துணைத்தூதுவர் பாலச்சந்திரன் இலங்கை ரூபாய் 2 லட்சம்...

கோவிட் -19 தடுப்பூசிகள் ஏற்றிய இந்திய விமானம் கட்டுநாயக்கவில் வந்திறங்கியது

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏஐ-281 இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய 5 லட்சம் ஒக்ஸ்போர்ட் கோல்ஷூல்ட் கோவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு இன்று முற்பகல் 11.35 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச...

Related News

பெப். 4இல் கிளிநொச்சியில் கறுப்பட்டிப் போராட்டம்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு ஒறுப்பு போராட்டம் ஒன்றை வரும் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 6ஆம் திகதி வரை நடத்த...
- Advertisement -
error: Alert: Content is protected !!