காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டி வன்முறைகள்: 159 பேர் நேற்று கைது

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களிலும் நாடுமுழுவதும் நபர்களை தாக்கி அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 159 பேர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நீர்கொழும்பில் நட்சத்திர விடுதிகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நீர்கொழும்பு பொலிஸாரால் சிறப்பு பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.