கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் மலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

“எனது ரி-20 காலணிகளைத் தொங்கவிட்டு, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்! என் பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, மேலும் வரும் ஆண்டுகளில் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன்” என்று அவர் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.