சர்வதேச கிரிக்கெட்டில் ‘டைம் அவுட்’ ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை அணி வீரர் அஞ்சலோ மத்யூஸ் பெற்றுள்ளார்.
2023 உலகக் கிண்ணத் தொடரில் இன்று டில்லியில் நடைபெறும் லீக் போட்டில் பங்களாதேஷ் – இலங்கை அணிகள் மோதுகின்றன.
சதீர சமரவிக்ரமவின் விக்கெட்டை வீழ்த்திய போது, மத்யூஸ் 6ஆவது இடத்தில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கினார். ஆனால் அவர் ஒரு பந்தை எதிர்கொள்ள 3 நிமிடங்கள் தாமதமாகின. அதனால் அவர் துடுப்பெடுத்தாடாமே ஆட்டமிழக்க நேரிட்டது. இது சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் முதல் முறையாகும்.
மாற்று வீரராக உலகக் கோப்பைக்கு தாமதமாக நுழைந்த இலங்கையின் மூத்த சகல துறை வீரர் மத்யூஸ், தனது தலைக்கவசம் தொடர்பான சிக்கலைத் தீர்க்க நேரம் எடுத்தபோது பங்களாதேஷ் அணி முறையிட்டதால் குழப்பமடைந்தார்.
இலங்கை இன்னிங்ஸின் 25 வது ஓவரில் ஷகிப் அல் ஹசன் சமரவிக்ரமவை ஆட்டமிழப்புச் செய்த பின்னர், இந்த சம்பவம் நடந்தது.
மத்யூஸ் உள்ளே நடக்க தனது நேரத்தை எடுத்துக் கொண்டார், பின்னர் அவர் களத்தில் இருந்தபோது அவரது தலைக்கவசம் அணிவதில் போராடினார்.
புதிய தலைக்கவசம் அணிவதற்காக டிரஸ்ஸிங் அறைக்கு அவர் சமிக்ஞை செய்தபோது, ஷகிப் மற்றும் பங்காளதேஷ் அணி “டைம் அவுட்” வெளியேற்றத்திற்கு முறையிட்டது. நடுவர்கள் மத்யூஸின் ஆட்டமிழப்பை உறுதி செய்தனர்.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 “காலம் கடந்த” வெளியேற்றம் தொடர்பான விளையாட்டு விதிமுறைகள் பின்வருமாறு:
40.1.1 விக்கெட் வீழ்ந்த பிறகு அல்லது ஒரு துடுப்பாட்ட வீரரின் ஓய்வுக்குப் பின்னர், உள்வரும் துடுப்பாட்ட வீரர் 2 நிமிடங்களில் பந்தைப் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அல்லது மற்ற துடுப்பாட்ட வீரர் அடுத்த பந்தை 2 நிமிடங்களுக்குள் பெறத் தயாராக இருக்க வேண்டும். அதனை மீறினால் உள்வரும் துடுப்பாட்ட வீரர் ,”டைம்ட் அவுட்” முறையில் ஆட்டமிழப்புச் செய்யப்படலாம்.

மத்யூஸ் தனது முதல் பந்தை எதிர்கொள்ள இரண்டு நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதால், முறையீட்டைத் தொடர்ந்து பெவிலியனுக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட்டில், ஆண்கள் அல்லது பெண்கள், ஒரு துடுப்பாட்ட வீரர் “டைம் அவுட்” சட்டத்தின்படி வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறை என்று ஐசிசி உறுதிப்படுத்தியது.
