டெங்கு பரிசோதனை மற்றும் குருதி பரிசோதனை ஆகிய இரண்டிற்கும் அதிக கட்டணம் வசூலித்த 12 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களின் நடத்துநர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
விதிமுறைகளை மீறியதாகவும் குறிப்பிட்ட சோதனைகளுக்கு அரசிதழ் விலைக்கு மேல் வசூலித்ததாகவும் கண்டறியப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்களால் தண்டம் விதிக்கப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை கூறியது.
நுகேகொட, கல்கிசை, மாளிகாகந்த மற்றும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மீறுபவர்களுக்கு சுமார் 9.4 மில்லியன் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது என அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பொதுவாக பயன்படுத்தப்படும் அனைத்து ஆய்வக சோதனைகளுக்கும் தரப்படுத்தப்பட்ட விலைகளை அறிவிக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.