குறுகிய தூர சேவைகளிலேயே அரச பேருந்துகள் ஈடுபடுத்தப்படும்

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் குறுகிய தூர சேவைகளிலேயே ஈடுபடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையை அடுத்து இன்றைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.