Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்கொடிகாமத்தில் மினி பஸ், ஹைஏஸ் மோதி விபத்து - பயணிகள் பலர் காயம்

கொடிகாமத்தில் மினி பஸ், ஹைஏஸ் மோதி விபத்து – பயணிகள் பலர் காயம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் ஏ9 முதன்மை வீதியில் தனியார் சிற்றூர்தி ஹைஏஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின.

இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த தனியார் சிற்றூர்தி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹைஏஸ் வாகனமும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது.

தனியார் சிற்றூர்தி தடம்புரண்டதில் பயணிகள் பலர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular