கொள்கை சரியானது வழிமுறைதான் பிழை

வலி.மேற்கு பிரதேச சபை எல்லையிலுள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் உள்பட புகையிலை உற்பத்தி பொருள்களின் விற்பனையை முற்றாகக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற சுகாதாரத்துறையினரின் கொள்கை வரவேற்கத் தக்கது – கட்டாயமானது.

அதனை வென்றெடுப்பதில் சுகாதாரப் பரிசோதகர் கடந்த சில வருடங்களாக முன்னெடுக்கும் பணிகள் அளப்பரியவை. ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக  ஒவ்வொரு சுகாதாரப் பரிசோதகரின் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது.

- Advertisement -

எனினும் அண்மை நாள்களாக அவர்கள் எடுக்கும் சில நடவடிக்கைகள்தான் பிழையானவையாக – இயற்கை நீதிக்கு புறம்பானவையாகவும் உள்ளன.

வலி.மேற்கு பிரதேச சபைப் பிரிவில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்களில் சுகாதார சீர்கேடுகள் பற்றி அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன – அவற்றால் அதிகளவு தண்டம் மல்லாகம் நீதிமன்றால் அறவிடப்பட்டுள்ளது.

அத்தனை வழக்குகளிலும் வர்த்தகர் சுகாதார சீர்கேடாக செயற்பட்டமை தொடர்பான சான்றுகளை சுகாதாரப் பிரிவினர் முன்வைத்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்ட வர்த்தகர்களை ஆராயும் போதுதான் மற்றொரு தகவல் வெளியாகின்றது.

இவ்வாறு நீதிமன்றம் ஏறிய வர்த்தகர்களில் பெரும்பாலானோர் சிகரெட் உள்ளிட்ட புகையிலை உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்தோர்.

வர்த்தகர்கள் மீது சுகாதார சீர்கேடுகள் பற்றிய குற்றச்சாட்டு வழக்குகளைத் தொடுத்து நடவடிக்கை எடுப்பது சுகாதாரப் பரிசோதகர்களின் தவறில்லை. அது அவர்களின் கடமை.

ஆனால் இந்த விடயத்தில் புகையிலை உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யாத வர்த்தக நிலையங்களை சுகாதாரத் துறையினர் கண்டுகொள்வதில்லை என்பதுதான் பிழையான வழிமுறையாகும்.

“சிகரெட் விற்றால் பிஎச்ஐ கடைக்குள் புகுந்து சோதனை செய்வார். அதனை விற்காவிடின் பிஎச்ஐயின் தொல்லையில்லை” என்று வர்த்தகர் கூறுமளவுக்கு சுகாதாரத் துறையின் பணிகள் இருக்கக் கூடாது.

புகையிலை உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யாத வர்த்தக நிலையங்களின் நுகர்வோரில் சுகாதாரத் துறைக்கு அக்கறையில்லையா?

எனவே சுகாதாரச் சீர்கேடு விடயத்தில் சுகாதாரப் பரிசோதகர்கள் பக்கச் சார்போ – சலுகைகளோ இருக்கக் கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!