கொழும்பிலுள்ள தற்காலிக குடியிருப்பாளர்களின் தகவல்களை சேகரிக்கும் பொலிஸார்

கொழும்பு மாநகரில் வசிக்கும் அனைத்து தற்காலிக குடியிருப்பாளர்களின் தகவல்களை சேகரிக்கும் மூன்று நாள் நடவடிக்கையை பொலிஸார் இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளனர்.

இவ்வாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.