கொழும்பு பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

2021ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்கு விலைச் சுட்டி 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

எஸ் அண்ட் பி இலங்கை 20 (S&P SL20) குறியீடும் 13 சதவீதம் உயர்ந்து 414.5 பில்லியன் ரூபாய் சந்தை வருவாயுடன் முந்தைய சாதனைகளை முறியடித்தது என்று கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

- Advertisement -

இது 2020ஆம் ஆண்டில் ஆண்டு சந்தை வருவாய் 396 பில்லியன் ரூபாயைவிட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையின் வரலாற்றில் இது போன்ற ஒரு குறுகிய காலத்தில் இது மூன்றாவது மிக உயர்ந்த மதிப்பாகும்.

முன்னதாக, 2010 மற்றும் 2011 க்கு இடையில் இத்தகைய சந்தை வருவாயின் மிக உயர்ந்த அளவு பதிவு செய்யப்பட்டது. 570 பில்லியன் மற்றும் 546 பில்லியன் ரூபாய் பதிவாகியுள்ளது.

மே 31, 2021 அன்று, தினசரி சராசரி சந்தை வருவாய் எப்போதும் இல்லாத அளவுக்கு 4.4 பில்லியன் ரூபாயை எட்டியது.

கொழும்பு பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலிருந்து வேலை செய்யும் கருத்தை கடைபிடிப்பதன் மூலம் நிறுவனம் இந்த வளர்ச்சிக் கட்டத்தில் நுழைந்துள்ளது.

இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தை இன்று வெள்ளிக்கிழமை 0.68 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது. எல்ஓஎல்சி ஹோல்டிங்ஸ், கொமர்ஷியல் லீசிங் அன்ட் ஃபைனான்ஸ் மற்றும் எக்ஸ்போலங்கா ஆகியவை பங்கு விலைச் சுட்டியை உயர்த்தியுள்ளன என்று தரகர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!