கொழும்பு பங்குச் சந்தை குறியீடு 3.6ஆக வீழ்ச்சி – பொருளாதார நெருக்கடி பற்றிய நிதி அமைச்சரின் நேற்றைய அறிவிப்பால்

இன்று புதன்கிழமை இலங்கையின் பங்கு குறியீடு 3.6 சதவிகிதமாக பலவீனமாக முடிவடைந்தது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, நாட்டின் பொருளாதாரம் பற்றிய ஒரு கசப்பான உண்மையை வெளிப்படுத்திய ஒரு நாளில் முதலீட்டாளர்கள் விளிம்படைந்ததால் இந்த வீழ்ச்சியை பங்குச் சந்தை எதிர்கொண்டுள்ளது என்று முகவர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

நாட்டின் பங்குச் சந்தையின் இன்றைய வீழ்ச்சி கடந்த பெப்ரவரி 22ஆம் திகதிக்குப் பின்னர் மிகப்பெரிய சதவிகித குறியீட்டு வீழ்ச்சியாகும் என்று பங்குத் தரவு காட்டுகிறது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையில், “இலங்கை கடுமையான வெளிப்புற நெருக்கடியையும், வருவாய் வீழ்ச்சி மற்றும் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் உள்நாட்டு நெருக்கடியையும் எதிர்கொள்கிறது என்று கூறினார். அரசு வட்டி கூடிய கடன்களை வாங்காது, சலுகைக் கடன்களுக்கு மட்டுமே செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!