கோதா கோ கமவிற்கு எதுவும் செய்யப்போவதில்லை; போராட்டம் தொடரவேண்டும் – தனது பாணியில் ரணில் பதில்

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மிகக் குறுகிய காலத்தில் தீர்வு காணப்பட்டு மக்கள் துன்பங்களில் இருந்து விடுபடுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு வழுகாராமயவில் இடம்பெற்ற சமய ஆராதனையின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எப்படி பெரும்பான்மையை காட்ட முடியும் என்று பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பெரும்பான்மையைக் காட்ட விரும்பும் போது அது காண்பிக்கப்படும் என்று பிரதமர் பதிலளித்தார்.

பெரும்பான்மையானவர்கள் அரசுக்கு ஆதரவைக் காட்டுகின்றார்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மக்கள் துயரத்தில் இருந்து விடுபடுவதை ஊடகங்கள் விரும்பவில்லையா என்று பிரதமர் கேட்டார்.

மக்கள் தொடர்ந்தும் இந்த அழுத்தத்தில் இருப்பது ஊடகங்களின் நலனுக்கு உகந்ததா என பிரதமர் ஊடகவியலாளர்களிடம் வினவினார்.

குறுகிய அரசியலை இப்போது கைவிடுமாறு பிரதமர் மேலும் மக்களை வலியுறுத்தினார்.

கோத்தா கோ கமவிற்னு என்ன நடக்கிறது என்று கேட்டதற்கு, போராட்டம் தொடர வேண்டும் என்றும் கோத்தா கோ கமவிற்கு எதுவும் செய்யப் போவதில்லை என்றும் பிரதமர் கூறினார்.

ஏதோ ஒரு வகையில் ரணில் கோ கிராமம் இருந்தால் என்ன செய்வீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் பிரதமரிடம் கேட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த விக்கிரமசிங்க, சில தினங்களுக்கு முன்னர் ‘ரணில் வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்ற கோஷத்தை ஏந்தியவாறு ஒரு குழுவினர் தமது வீட்டுக்கு முன்பாகச் சென்றதாகத் தெரிவித்தார்.

அனைவரும் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறினால் நாட்டை ஆள்வதற்கான அமைப்பை உருவாக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.