கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மீளப்பெறப்பட்டுள்ளதுடன், அதனால் அதன் விலை அதிகரிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஜனவரியில் கோதுமை மாவுக்கு சுங்க இறக்குமதி வரி கிலோ கிராமுக்கு 15-16 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. எனினும் கடந்த அரசினால் வரி விலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, சுங்க கட்டளைச் சட்டத்தின் 19அ பிரிவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சுங்கத் திணைக்களத்திற்கு அறிவித்தது.
2019 டிசம்பரில், அப்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான ஒரு கிலோகிராம் 36 ரூபாய் என்ற ஒருங்கிணைந்த வரி, அரசிதழ் அறிவிப்பின் மூலம் ஒரு கிலோ கிராமுக்கு 8 ரூபாய் என்ற சிறப்புப் பண்ட வரியாக (SCL) மாற்றப்பட்டது.
இதனால் அரசின் வருமானமாக பலகோடி ரூபாய் திறைசேரிக்கு வராமல் போனது என்று சுட்டிக்காட்டப்பட்டது.