கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 195 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோதுமை மாவின் சில்லறை விலையும் குறையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் போதியளவு இருப்புக்கள் இருப்பதால் கோதுமை மாவின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.