கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கான 3 ரூபா சுங்க வரிச் சலுகை நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சினால் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோகிராம் சீனியின் விலையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.