கோத்தாபய – ரணில் அரசில் ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் அமைச்சுப் பதவி ஏற்கமாட்டார்கள்

கோத்தாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவியில் நீடிக்க வேண்டும் என்ற நோக்கில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

புதிய அரசில் தமது கட்சியில் இருந்து எவரும் இணையப்போவதில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

முடிந்தால் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை நிரூபிக்குமாறு புதிய பிரதமருக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால் விடுத்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அமைச்சரவையில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்க ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது என்றும் மத்துமபண்டார தெரிவித்தார்.