Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கத்தி காண்பித்து அச்சுறுத்திய ஆவா குழு

கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கத்தி காண்பித்து அச்சுறுத்திய ஆவா குழு

கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கிறீஸ் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய ஆவா வினோதன் மற்றும் மல்லாகம் ரஞ்சித் ஆகியோர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பித்துள்ளனர்.

உரும்பிராய் சந்நியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மறித்து சோதனையிட முற்பட்டனர்.

அதன்போது பொலிஸாருக்கு கிறீஸ் கத்தியைக் காண்பித்த அவர்கள் மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை என்பவற்றைக் கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை மீட்ட பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.

இதேவேளை, மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் பாரப்படுத்ததாது வெளியில் எடுப்பதற்கு பல மட்டங்கள் ஊடாக முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular