கோரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதால் நெல்லியடியில் பிரபல வெதுப்பகத்துக்கு சீல்

வடமராட்சி நெல்லியடியில் பிரபல வெதுப்பகம் ஒன்றின் பணி புரிபவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்ட நிலையில் அந்த வெதுப்பகம் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.

நெல்லியடியில் உள்ள பிரபல வெதுப்பகத்தின் பணியாளர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

- Advertisement -

அதனால் சுகாதார கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் கோரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட வெதுப்பகம் மறு அறிவித்தல் வரை முத்திரையிடப்பட்டு மூடப்பட்டுள்ளது.

கோரோனா தொற்றாளரின் முதல்நிலை தொடர்பாளர்களிடம் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர் கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டு வெதுப்பகத்தை மீள இயங்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!