கோரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி கத்தோலிக்க தேவாலயங்களில் வழிபாடு

தற்போது பெரும் அபாய நிலையிலுள்ள இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து கோரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி சிறப்பு செப வழிபாடுகள் கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று மாலை நடைபெற்றன.

இதன்படி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும், துறவற இல்லங்களிலும், இறைமக்களின் இல்லங்களிலும் இன்று சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை செப வழிபாடு இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் பெரிய கோயிலில் இன்று மாலை 5.30 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டது. தொடர்ந்து செப மன்றாட்ட வழிபாடு இடம்பெற்றது.