கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வடக்கில் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

வடக்கு மாகாணத்தில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கோரோனா வைரஸ் பரவல் நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் நிலையில் ,இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்தவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது. ஆகையால் வடமாகாணத்தில் பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  1. சுகாதார அமைச்சினால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் வைபவங்களை தவிர்த்துக்கொள்ளவும் அல்லது பிற்போடவும்.
  2. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக, அலுவலகங்கள் , பொது நிறுவனங்களில் முககவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளி பேணுதல் , உடல்வெப்பநிலை அளவிடுதல் மற்றம் வருகை தருவோரின் விவரங்கள் பதிவேட்டினை பேணுதல் போன்றவற்றை இறுக்கமாகப் பின்பற்றவேண்டும்.
  3. பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் கட்டாயமாக கடைபிடித்தல் வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
  4. தவிர்க்கமுடியாத கட்டாயமாக நடாத்தப்படவேண்டிய நிகழ்வுகளை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான அங்கத்தவர்களுடன் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடாத்தப்படல் வேண்டும்.
  5. வர்த்தக நிலையங்கள், சலூன்கள் உணவகங்கள் போன்றவற்றிற்கு ஏற்கனவே சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்
  6. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களுக்கு அளவான பயணிகள் மட்டுமே பயணம் செய்யமுடியும்.
  7. காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டைநோ உள்ளவர்கள் அலுவலகங்கள் அல்லது பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் வேண்டும்.
  8. இயலுமானவரை நீண்டதூர பயணங்களை தவிர்த்தல் வேண்டும்.
  9. பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை நடாத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை இறுக்கமாக கடைப்பிடிக்கவும்.

எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரம்பலை எமது மாகாணத்தில் கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம்...
- Advertisement -

ஓஎல் பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு...

வடமராட்சியில் காணாமற்போயிருந்த இளைஞன் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோவிட் -19 நோயால் மேலும் இருவர் சாவு; இரண்டாவது அலையால் பாதித்தோர் எண்ணிக்கை 20,000ஐத் தாண்டியது

நாட்டில் இன்று (நவ.30) திங்கட்கிழமை கோவிட் -19 நோயாளிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118ஆக உயர்வடைந்துள்ளது.

Related News

முதன்முறையாக இணையவழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவைக் கூட்டம் இணையவழியில் நேரலையாக (Online Streaming) இடம்பெற்றது என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ்...
- Advertisement -
error: Alert: Content is protected !!