கோரோனா வைரஸ் மனித தோலில் 9 மணிநேரம் உயிர் வாழும் – ஜப்பான் ஆய்வில் கண்டறிவு

புதிய கோரோனா வைரஸ் ஏனைய காய்ச்சல் வைரஸ்களை விட மனித தோலில் நீண்ட காலம் உயிர் வாழக் கூடியது என்று ஜப்பான் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கோவிட் -19 நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 என்ற வைரஸ் மனித தோலின் மாதிரிகளில் சுமார் 9 மணி நேரம் உயிர் வாழச் சாத்தியமானதாக இருந்தது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் (IAV) ஒரு திரிபு மனித தோலில் சுமார் 2 மணி நேரம் வாழும் சாத்தியமானதாக இருந்தது ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக, தோலில் உள்ள இரண்டு வைரஸ்களும் கை சுத்திகரிப்பு (Hand sanitizer)
மூலம் விரைவாக செயலிழக்கக் கூடியவை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோவிட்-19 நோய் பரவுவதைத் தடுக்க உங்கள் கைகளைக் கழுவுதல் அல்லது சானிட்டீசரைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை கண்டுபிடிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.