கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமைச்சரவையும் சுகாதார வல்லுநர்களுமே எடுக்கவேண்டும்; அரை இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு- நாடாளுமன்றில் ரணில் உரை

சுகாதார அதிகாரிகளுக்கு இராணுவம் தனது ஆதரவை வழங்க முடியும் என்றாலும், கோவிட்-19 கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்பான முடிவுகளை அமைச்சரவை மற்றும் சுகாதார வல்லுநர்களே எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று வலியுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றார்.

- Advertisement -

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன் உறுதியுரை எடுத்தார்.

காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

முன்னாள் பிரதமர் விக்ரமசிங்கவுக்கு எதிர்க்கட்சியில் முன் வரிசை இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் தனது தொடக்க உரையை நிகழ்த்திய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க கடுமையான திட்டத்தை வகுக்குமாறு அரசுக்கு அழைப்பு விடுத்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அரசும் அமைச்சரவையையும் ஒரு திட்டத்தை வகுத்து நாடாளுமன்றத்தின் முன் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தால் விவாதிக்க முடியும் மற்றும் ஒரு பயனுள்ள திட்டத்தை தொடங்க முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நாட்டின் இருப்புக்களை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படவும், கடன்களை நிறைவேற்றவும் முன்னாள் பிரதமர் அரசை வலியுறுத்தினார்.

வெளிநாடுகளிடமிருந்து தற்காலிக உடன்படிக்கைகளை நாடுவது நீண்ட காலத்திற்கு போதுமானதாக இருக்காது.

நிதி நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிக்க நாடாளுமன்றம் தனது நிதி அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எதிர்க்கட்சியும் அரசை ஆதரிக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

நாட்டின் கோரோனா வைரஸ் நிலமை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டரீதியான அதிகாரங்கள் இல்லாத ஒரு குழு கோவிட்-19 நெருக்கடியைக் கையாளக்கூடாது என்று கூறியதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க அமைச்சரவையில் முக்கிய பங்கு வகிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அரசு தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தத் தவறியதாலும், அரச அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதாலும் கோரோனா வைரஸ் நிலமை மோசமடைந்துள்ளது.

சிவில் விவகாரங்களில் இராணுவத்தின் ஈடுபாட்டை அனுமதிக்க முடியாது என்றும் அது வேறு எந்த நாட்டிலும் நடக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அதிகாரிகளுக்கு இராணுவம் தனது ஆதரவை வழங்க முடியும் என்றாலும், கோவிட்-19 கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்பான முடிவுகளை அமைச்சரவை மற்றும் சுகாதார வல்லுநர்களே எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் அரை இராணுவமயமாக்கலுக்கு சாட்சியாக இருப்பதாகவும், இது அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் கவலைப்பட வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க கூறினார்.

தனது நிறைவுரையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கோரோனா வைரஸ் மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

அனைத்து இலங்கையர்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற ஒரு விரிவான திட்டத்தை வகுப்பதன் முக்கியத்துவத்தை முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கடந்த கால தவறுகள் குறித்து விவாதிப்பதற்கு பதிலாக, தற்போதைய சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அரசும் முழு நாடாளுமன்றமும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!