கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானதா? – மருத்துவ ஆலோசனை

மருத்துவ வல்லுநரின் ஆலோசனை

இலங்கையின் சகல மாவட்டங்களிலும் கோவிட்-19 தடுப்பூசி மருந்தானது வேகமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இருந்தபோதும் மக்களிடையே இது சம்மந்தமான பல சந்தேகங்களும் , நிச்சயமற்ற தன்மையும் இருப்பதோடு, பல தவறான கருத்துக்களும் சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகின்றது. இவை சமம்ந்தமான சில தெளிவுகளை இப்போது பார்க்கலாம்.

  1. சீனாவின் தடுப்பூசி பாதுகாப்பற்றது.

இலங்கையில் செலுத்தபடுவது சினோபார்ம் என்ற சீன தடுப்பூசி ஆகும். இது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட , சீன மக்கள் உள்பட பல நாடுகளில் பாவனையில் உள்ள ஒரு தடுப்பூசி.

இதற்கான பக்க விளைவுகள் மிகவும் குறைவாக இருப்பதோடு, இதன் நோய் எதிர்ப்பு சக்தி மற்றைய நாடுகளின் ஊசிகளுக்கு சமனாக இருப்பதாக பல ஆராட்சிகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் அண்மையில் சில ஊடகங்களில் சினோவக் என்ற இனொரு சீன தயாரிப்பு தடுப்பூசி சம்மந்தமாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அது இலங்கையில் பாவனையில் இல்லாதது காரணமாக மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.

  1. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் கோரோனா தொற்று வருகின்றது.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற பின்னரே ஒருவருக்கு முழுமையான நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
தடுப்பூசிகள் கோரொனா தொற்று ஏற்படுவதினை தடுப்பதிலும் பார்க்க, ஒருவர் இறப்பதினை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

இதன் காரணமாகத் தான், தடுப்பூசி பெற்றுகொண்டாலும் முகக்கவசம், சமூக இடைவெளி, கையுறை போன்ற சுகாதர முறைகளை கடைபிடித்தல் வேண்டும்.

தடுப்பூசி போடப்பட்ட ஒருவருக்கு கோரோனா வரும்போது அவருக்கு ஏற்படும் நோய் நிலமை மிகவும் குறைவாக இருப்பதுடன், அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு செல்ல வேண்டிய நிலமை இல்லாது இருக்கும்.

  1. கோரோனா தடுப்பூசியினால் மலட்டு தன்மை ஏற்படலாம்.

மலட்டு தன்மை, மாதவிடாய் சீரின்மை, போன்றன எந்தவித ஆதரமும் இல்லாத, தவறாக பரப்பப்படும் தகவல்கள் ஆகும்.

  1. நீண்டகால பக்கவிளைவுகள் ஏற்படலாம்

இதுவும் ஆதரமற்ற ஒரு உண்மைக்கு மாறான தகவல்கள். தடுப்பூசிகளில் நீண்டகால பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் எவ்விதமான பதார்த்தங்களும் இல்லை.

  1. குருதிக் கட்டிகள் உருவாகலாம்.
    இதற்கான சந்தர்பங்கள் புறக்கணிக்கக் கூடியதுடன், மிக மிக குறைவு எனலாம். அவ்வாறு ஏற்பட்டால், அவற்றினை குணபடுத்தும் சிகிச்சை முறைகள் உள்ளன.

முடிவாக கோரோனா தடுப்பூசி என்பது எம்மை இந்த தொற்று நோய் பேரழிவில் இருந்து பாதுகாக்க கூடிய சிறந்த ஆயுதமாக காணப்படுவதுடன், மக்கள் தேவையற்ற சந்தேகங்களை தவிர்த்து, அதனை பெற்றுக்கொண்டு தமது பெறுமதிமிக்க உயிர்களை பாதுகாத்தல் வேண்டும்.