கோவிட் -19 நோயால் மேலும் மூவர் உயிரிழப்பு

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று புதன்கிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 6 வாரங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

கந்தானையைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண், கொழும்பு 12ஐச் சேர்ந்த 74 வயதுடைய பெண் மற்றும் கொழும்பு 13ஐச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஆகிய மூவரே கோவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 18 ஆயிரத்து 308 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்து 587 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 69 பேர் உயிரிழந்துள்ளனர்.