கோவிட்-19 மாத்திரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமா?

கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் மற்றும் தொடர்புடைய உயிரிழப்போரின் எண்ணிக்கை தெளிவான வீழ்ச்சி இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் பதில் பணிப்பாளர், மருத்துவர் சமிதா கினிகே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“இந்த நிலமையை தொடர்ந்து பராமரிக்க மக்களின் ஆதரவு அவசியம் என்று அவர் கூறினார்.

நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் 6 சதவிகிதம் மட்டுமே கோவிட்-19 நோயாளிகளாக பதிவாகியுள்ளனர். மற்ற நோயாளிகள் கோவிட்-19 அல்லாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒப்பீட்டளவில் கோரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதைக் குறிக்கிறது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கோவிட்-19 தொற்றுநோய்க்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாத்திரைகளை இறக்குமதி செய்யும் திட்டம் உள்ளதா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த மருந்து இன்னும் ஆராய்ச்சி நிலையில் உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து நாட்டில் அதன் பயன்பாடு பற்றி தீர்மானம் எடுக்கப்படும் என்று தொற்றுநோயியல் பிரிவின் பதில் பணிப்பாளர், மருத்துவர் சமிதா கினிகே தெரிவித்தார்.