சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளிலிருந்து பணம் பரிமாற்றப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்

சட்டத்துக்குப் புறம்பான பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பரிமாற்றப்பட்ட பணம் உள்ள பெறுவோரின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அனைத்து புலம்பெயர்ந்த இலங்கையர்களும் தங்கள் வருமானத்தை சட்டரீதியான முறையில் நாட்டுக்கு பரிமாற்றுமாறு அவர் கேட்டுள்ளார்.