Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்சமுர்த்தி உத்தியோகத்தர் எனக் கூறி நகைகளை அபகரித்தவர் சிக்கினார்

சமுர்த்தி உத்தியோகத்தர் எனக் கூறி நகைகளை அபகரித்தவர் சிக்கினார்

lயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் இர வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமுர்த்தி உத்தியோகத்தர் என தன்னை அறிமுகம் செய்து வீதியால் செல்வோரிடம் உதவித் திட்டம் தருவதாகப் பேசி நகைகளை அபகரித்து தப்பித்தவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து கொள்ளையிட்ட 10 பவுண் நகைகளை பொலிஸார் கைப்பற்றினர்.

சுன்னாகம் பகுதியில் இவ்வாறு நான்கு சம்பவஙகளுடன் அவர் தொடர்புபட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சீரமைப்பு வேலைகள் இடம்பெற்ற வேளை 6 லட்சம் பெறுமதியான வீட்டு உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து திருடப்பட்ட வீட்டு குளியறை உபகரணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் கேவா வசந் தலைமையிலான பிரிவினரே இந்த கைது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular