லிட்ரோ லங்கா பிரைவேட் லிமிடெட் இன்று பெப்ரவரி 5ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு (LP Gas) விலையில் திருத்தம் செய்யப்படவுள்ள நிலையில் மாலைக்குள் விலை அதிகரிப்பை அறிவிக்கவுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 500 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.
கடந்த மாதம் லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 200 ரூபாயினால் குறைத்தது. தற்போது கொழும்பில் சில்லறை விலையாக 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் 4 ஆயிரத்து 409 ரூபாயாகும்.