சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நாட்டின் இரண்டு முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லிட்ரோ (Litro Gas Lanka) அதன் தயாரிப்புகளின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.
இந்த விலை குறைப்பு நாளை (ஜூன் 04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3 ஆயிரத்து 638 ரூபாவாகும்.