Friday, September 22, 2023
Homeஅரசியல்சர்வதேச நாணய நிதியம் பச்சைக்கொடி: தேர்தல் ஒத்திவைப்பு; அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

சர்வதேச நாணய நிதியம் பச்சைக்கொடி: தேர்தல் ஒத்திவைப்பு; அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

சர்வதேச நாணய நிதியத்தின் சாதகமான சமிக்ஞை மற்றும்  தேர்தல் ஒத்திவைப்புடன்  துரிதமாக அமைச்சரவை மாற்றம்  இடம்பெறவுள்ளது என்று அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்தன.

ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக Bloomberg இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் சாதகமான பதில் கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பில்  ஜனாதிபதி அறிக்கை கோரியிருந்தார்.

தற்போதைய அமைச்சரவையில் எரிசக்தி, பொலிஸ் மற்றும் வர்த்தகம் ஆகிய அமைச்சுகளை நிர்வகிக்கும் மூன்று அமைச்சர்களே  வெற்றிகரமாக செயற்பட்டுள்ளதாக  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட  தற்போதைய அமைச்சரவை மாற்றுமாறு  ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அமைப்புகள் கோரியுள்ளன.

இந்த நிலையில் விளையாட்டு, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து  , வெகுஜன ஊடகத்துறை, துறைமுகம், தொழில் அமைச்சு என்பன அமைச்சரவை மாற்றத்தின் போது  மாற்றப்பட உள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular