சாதாரண தர பரீட்சை நாள்களில் மின்வெட்டு வேண்டாம் – மின்சார சபைக்கு அறிவுறுத்தல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காலப்பகுதியின் போது எவ்வித மின்வெட்டுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் வசதிகளை மின்சார சபைக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 6.30 மணிக்குப் பின்னர் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையில் இவ்வாறான மின்வெட்டுகளை தவிர்க்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.