சாவகச்சேரியில் இன்று மாலை 6.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றொருவர் படுகாயமடைந்து சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த
சண்முகலிங்கம் பிரஷாத் (வயது- 30) என்பவரே உயிரிழந்தார்.
சம்பவத்தில் கரவெட்டியைச் சேர்ந்த 27 வயதுடையவர் படுகாயமடைந்து சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.