சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கோரோனா இல்லை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பளையைச் சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் இன்று திடீரென உயிரிழந்தார்.

அதனால் அவரது சடலத்தில் மாதிரிகள் இன்று காலை பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. எனினும் அவருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம்...
- Advertisement -

ஓஎல் பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு...

வடமராட்சியில் காணாமற்போயிருந்த இளைஞன் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோவிட் -19 நோயால் மேலும் இருவர் சாவு; இரண்டாவது அலையால் பாதித்தோர் எண்ணிக்கை 20,000ஐத் தாண்டியது

நாட்டில் இன்று (நவ.30) திங்கட்கிழமை கோவிட் -19 நோயாளிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118ஆக உயர்வடைந்துள்ளது.

Related News

முதன்முறையாக இணையவழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவைக் கூட்டம் இணையவழியில் நேரலையாக (Online Streaming) இடம்பெற்றது என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ்...
- Advertisement -
error: Alert: Content is protected !!