சிகரெட் ஒன்றின் விலையை 25 ரூபாயினால் அதிகரித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதனால் சிகரெட் ஒன்றின் புதிய விலை 125 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு சிகரெட் உற்பத்தியின் வகைகளின் அடிப்படையில் 5 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 25 ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைபிடித்தல் விகிதங்களை கட்டுப்படுத்தும் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு சிகரெட்டின் கணிசமான விலை உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.