சிறுமி உயிரிழப்பு; ரிசாத் எம்.பியின் மனைவி உள்ளிட்டோரின் தொலைபேசி பதிவுகளைப் பெற உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் மனைவி உள்பட நான்கு பேரின் தொலைபேசி பதிவுகளை வழங்க தொலைபேசி இணைப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய 16 வயது சிறுமியின் இறப்புத் தொடர்பான விசாரணையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை நேற்று வழங்கியது.

- Advertisement -

சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்ததாகக் கூறப்படும் தரகரின் வங்கிக் கணக்கு பதிவுகளை ஆய்வு செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜெயசூரிய, பொலிஸாருக்கு அனுமதி அளித்துள்ளார்.

பொரளை பொலிஸாரின் நகர்த்தல் பிரேரணை மூலம் முன்வைத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!