சிறைச்சாலைகளுக்குள் அருவருப்பான முறையில் நடந்துகொண்ட இராஜாங்க அமைச்சரை பதவி நீக்கவேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

அனுராதபுரம் சிறை வளாகத்தில் அருவருப்பான – சட்டத்துக்குப் புறம்பான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் இராஜாங்க அமைச்சரை உடனடியாக நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுதொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்த அருவருப்பான – சட்டத்துக்குப் புறம்பான செயல் நாட்டில் நிலவும் அட்டூழிய சூழ்நிலையின் ஒரு நல்ல நிரூபணமாகும்.

தாய்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளையும் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் நினைவுபடுத்தினார்.

இந்த சட்டத்துக்குப்புறம்பான மற்றும் இழிவான செயல் நமது நாட்டில் மனித உரிமைகள் நிலமை விரைவாக வீழ்ச்சியடைவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

மதுபோதையில் நண்பர் குழுவுடன் கடந்த 6ஆம் திகதி கொழும்பு சிறைச்சாலை தலைமையகத்திற்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர், அதே போன்று 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைக்குள் நுழைந்ததாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் தனது துப்பாக்கியை எடுத்துச் சென்ற இராஜாங்க அமைச்சர், அந்தச் சிறையிலிருந்து விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல கைதிகளை வெளியே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தனது நண்பர்களுக்கு தூக்கு மேடையை காட்ட விரும்புவதாக கூறி இராஜாங்க அமைச்சர் கடந்த 6ஆம் திகதி கொழும்பு சிறை தலைமையகத்திற்குள் நுழைந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன – என்றுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!