சி.டி. விக்ரமரத்னவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி முன்மொழிவு

இலங்கையின் அடுத்த பொலிஸ் மா அதிபராக தற்போது அந்தப் பதவியில் பதில் கடமையாற்றும் சி டி விக்ரமரத்னவை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பரிந்துரைத்துள்ளார் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்த வார ஆரம்பத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பெயரை நாடாளுமன்றப் பேரவைக்கு முன்மொழிந்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நாடாளுமன்றப் பேரவை நாளைமறுதினம் திங்கட்கிழமை கூடுகிறது. பேரவை சி.டி விக்ரமரத்னவின் பெயருக்கு ஒப்புதல் வழங்கியதன் பின்னர் ஜனாதிபதி முறையான நியமனம் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார், அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீது விசாரணைகள் நடைபெற்றதால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

ஜயசுந்தர 2020 மார்ச் மாதம் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். விக்ரமரத்ன தொடர்ந்து பதில் பொலிஸ் மா அதிபராகவே பதவி வகித்து வருகிறார்.

33 ஆண்டுகள் பொலிஸ் சேவையில் ஈடுபட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன 19 மாதங்கள் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில் முன்னரும் 13 முறை அந்தப் பதவியை இடைக்காலங்களில் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Must Read

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் 3 நாளைக்கு விடுமுறை

கிழக்கு மாகாண பாடாசாலைகள் அனைத்தும் நாளை (டிசெ.2) புதன்கிழமை தொடக்கம் வரும் வெள்ளிக்கிழமை (டிசெ.4) வரை மூடப்படுவதாக மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.
- Advertisement -

கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சித்த இருவர் செம்மணியில் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது...

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம்...

ஓஎல் பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு...

Related News

வடமராட்சியில் காணாமற்போயிருந்த இளைஞன் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
error: Alert: Content is protected !!