Tuesday, December 5, 2023
Homeஉள்ளூர் செய்திகள்சுன்னாகம் கொலை முயற்சி; வவுனியாவில் ஒளிந்திருந்த மூவர் சரண்

சுன்னாகம் கொலை முயற்சி; வவுனியாவில் ஒளிந்திருந்த மூவர் சரண்

இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீவைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் மூவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் சரணடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் காரில் பயணித்த கனி என்றழைக்கப்படுவரை கொலை செய்யும் நோக்குடன் வாகனம் ஒன்றினால் மோதி விபத்தை ஏற்படுத்தப்பட்டது. விபத்தின் பின் காருக்கு பெற்றோல் ஊற்றி தீவைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபரான ஜெகன் வவுனியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிடிருந்தனர்.

இந்த தாக்குதலைத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஜெகன், ரஞ்சித் மற்றும் முத்து என்றழைக்கப்படும் மூவர் வவுனியாவில் தலைமறைவாகியிருந்த நிலையில் சட்டத்தரணி ஊடாக சரண்டைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெகன் கும்பலில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular