சுபகிருது சித்திரைப் புத்தாண்டில் நல்லூரில் சிறப்பு வழிபாடு

சுபகிருது சித்திரைப் புத்தாண்டு தினமாகிய இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி
இன்று காலை 7.50 மணிக்கு சுபகிருது வருட பிறப்பு இடம்பெற்றிருந்த நிலையில் நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்து தமது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.