செபத்தால் மட்டுமே கோரோனா தொற்றுநோயை நீக்க முடியும் என நம்பி மத பேதமின்றி இறைவேண்டுதல் செய்யுங்கள் – கிருஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் யாழ்ப்பாணம் ஆயர்

“பாலக இயேசுவின் பிறப்பு உலக மக்கள் அனைவரையும் கோரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து இந்த தொற்று நோய் உலகில் இருந்து முற்றாக அகல வேண்டுமென பிராத்தியுங்கள். செபத்தால் மட்டுமே இந்த தொற்றுநோயை நீக்க முடியும் என நம்பி மத பேதமின்றி இறைவேண்டுதல் செய்யுங்கள்”

இவ்வாறு யாழ்ப்பாணம் மறைமாட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ளகிருஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

2020ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவை இன மத நிற மொழி வேறுபாடின்றி உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் வேளை உலக மக்கள் அனைவரும் கோரோனா வைரஸ் தொற்று நோய் பற்றிய பயத்திலும் பதட்டத்திலும் நோய் காரணமாக ஏற்படும் தாக்கங்களுக்கும் உள்ளாகி உள்ளனர்.

முதலில் பாலக இயேசுவின் அன்பும் அருளும் ஆசீரும் இவ்விழாவை கொண்டாடும் அனைவரோடும் என்றும் இருப்பதாக என இறை ஆசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

எந்தக் கொள்ளை நோயாலும் கிறிஸ்து பிறப்பின் ஒளியையும் மகிழ்வையும் நம்பிக்கையையும் குறைத்துவிட முடியாது. இந்த கொள்ளை நோய் காரணமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும் வேளையிலும் வீடுகளில் அமைக்கும் கிறிஸ்மஸ் மரங்களும் குடிலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையின் அடையாளங்களாக அமையட்டும்.

இந்த அடையாளங்களின் வெளி அர்த்தத்தையும் தாண்டிச்சென்று அவற்றின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இறை அன்பை மகிழ்வையும் முழுவதுமாக புரிந்து கொண்டு இயன்றவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கிறிஸ்து பிறப்பின் விழா என்றும் எந்த நிலையிலும் ஒரு மகிழ்வின் விழா. நம்பிக்கையின் விழா. இந்த விழாவை இவ்வாண்டு கோரோனா சுகாதார விதிமுறைகளையும் சமூக இடைவெளியையும் பேணி குடும்ப வட்டத்தில் அமைதியாகக் கொண்டாடுங்கள்.

பாலக இயேசுவின் பிறப்பு உலக மக்கள் அனைவரையும் கோரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து இந்த தொற்று நோய் உலகில் இருந்து முற்றாக அகல வேண்டுமென பிராத்தியுங்கள். செபத்தால் மட்டுமே இந்த தொற்றுநோயை நீக்க முடியும் என நம்பி மத பேதமின்றி இறைவேண்டுதல் செய்யுங்கள்.

உலகம் முழுவதிலும் நோயால் பாதிக்கப்பட்டோர் மன அமைதி பெறுவார்களாக. இறந்தவர்கள் நித்திய அமைதியைப் பெறுவார்களாக.

கோரோனா தொற்று முடிந்துவிடவில்லை. எமது பகுதிகளில் இப்போதுதான் அதிகரிக்கிறது. எனவே மிகுந்த கவனத்துடன் செயற்படுங்கள்.

தொற்றுநோய் மழைவெள்ளம் போன்ற இக்கட்டான வேளையில் உங்களால் இயன்ற வரை இயலாமையிலும் தேவையிலும் இருப்போருக்கு அன்புக்கரம் நீட்டுங்கள்.

இந்த பெருவிழாவின் போது உலகம் முழுவதிலும் பல்வேறு மொழிகளிலும் பாடப்படும் ஒரே இறைவார்த்தை உன்னதத்தில் கடவளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்பதாகும் (லூக்காஸ் 2:13-14)
இந்த பெருவிழாக்காலத்தில் அவருக்கு உகந்தவர்களாகி எல்லோரிற்கும் அமைதியையும் அன்பையும் உண்டாக்கும் கருவிகளாகவே நாம் அழைக்கப்படுகிறோம்.

உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்ற வார்த்தைகளை எமதாக்கி வாழ அழைப்பு விடுத்து இறையாசீருடன் கிறிஸ்மஸ் புது வருட வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்வாண்டு ஈஸ்ரர் ஞாயிறு தின தாக்குதல்களால் இலங்கையிலும் கோரோனா தொற்றால் உலகம் முழுவதிலும் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. புதிய ஆண்டு இறை அன்பும் அருளும் ஆசீரும் நிறைந்த ஆண்டாக இறையாசீர் வேண்டுகிறோம்.

கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை,
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

யாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் – திடீரென தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வுப் பணியில்

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது. இன்று வியாழக்கிழமை முற்பகல் நிலாவரைக் கிணறு...
- Advertisement -

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது....

நாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட் -19 நோயால்மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர்...

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு – நேரலையைப் பார்வையிடலாம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் நேரலையை பார்வையிடலாம்;

Related News

மன்னார் வைத்தியசாலையில் 2 தாதியர்கள், 2 ஊழியர்களுக்கு கோரோனா தொற்று; பொலிஸார் மூவரும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடமாகாண...
- Advertisement -
error: Alert: Content is protected !!