ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 75ஆவது சுதந்திர தின நிகழ்வின் போது நாட்டு மக்களுக்கு உரையாற்ற மாட்டார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு பதிலாக ஜனாதிபதியின் சிறப்பு அறிக்கையொன்று நாளை ஊடகங்கள் ஊடாக ஒளிபரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக நடைபாதையில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் உயர் அழுத்த நீரை பிரயோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.