யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி, ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது -77) காலமானார்.
யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் நீண்டகால தலைவியாக இருந்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீதிமன்றங்களின் மேம்படுத்தல்களிலும் சட்டத்தரணிகளின் நலன்களிலும் அக்கறையுடன் செயற்பட்டார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் மற்றும் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 11 மணியளில் அவரது உடுவில் இல்லத்தில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.