ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம் காலமானார். மறையும் போது அவருக்கு வயது 79.
உடல் நலக்குறைவு காரணமாக, வவுனியா பொது மருத்துவமனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை காலமானார்.
அவரது இறுதிக்கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
