ஜூனில் 26, 944 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டை விட்டு புலம்பெயர்வு

ஜூன் மாதத்தில் 26 ஆயிரத்து 944 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி மே மாதத்தில் 22 ஆயிரத்து 194 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

கடந்த மாதத்தில் 9 ஆயிரத்து 317 தொழில் புலமையற்ற தொழிலாளர்களாகவும், 7 ஆயிரத்து 977 புலம்பெயர்ந்தவர்கள் தொழில் புலமையுள்ள தொழிலாளர்களாகவும், 6 ஆயிரத்து 556 வீட்டுப் பணியாளர்களாகவும் புலம்பெயர்ந்துள்ளனர்.

இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்த்து 40 ஆயிரத்து 701 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெளிநாட்டு ஊழியர்களின் பணம் ஜூன் மாதத்தில் 274 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மேலும் குறைந்துள்ளது.

இது மே மாதத்தில் 304 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு மே மாத சுற்றுலா பயணிகளின் வருகையை விட ஜூன் மாதத்தில் வருகை அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் 30 ஆயிரத்து 207 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்திருந்தனர். ஜூன் மாதத்தில் அது 32 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளாக வந்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வர்த்தக நிலுவை மிகுதியாகப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி கூறுகிறது.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு மிகுதியாகப் பதிவாகியிருப்பது சிறப்பு.

ஜூன் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பது மற்றும் இறக்குமதி செலவில் தொடர்ந்து குறைந்து வருவதே இதற்குக் காரணம் என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.