ஜோகோவிச்சின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது – ஆஸ்திரேலியாவுக்கு 3 ஆண்டுகள் நுழைய முடியாது

முன்னணி டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் நுழைவிசைவு விண்ணப்பத்தை ரத்து செய்ய ஆஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் முடிவு செய்துள்ளதால் அவரது மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவால் ஒருமனதாக அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அவர் இன்னும் மூன்று வருடங்களுக்கு அந்த நாட்டுக்கு நுழைய அனுமதிக்கப்படமாட்டார்.

நுழைவிசைவு விண்ணப்பத்திற்காக பொய்யான தகவல்களை சமர்ப்பித்ததால் டென்னிஸ் வீரர் மீதான ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தனது நுழைவிசைவு ரத்து செய்ததற்கு ஆட்சேபனை தெரிவித்து குடிவரவு அமைச்சர் மீது ஜோகோவிச் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஜோகோவிச் 9 தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய ஓபன் நாளை தொடங்குகிறது. எனினும் அவர் அதில் இம்முறை பங்கேற்க முடியாது.

அவர் இம்முறை ஆஸ்திரேலிய ஓபன் சம்பியனை வென்றிருந்தால், டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை (21 பட்டங்களை) வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.